Ubuntu Forums Archive Viewer

தமிழ் விசைப்பலகை பிரச்சனை

Archived thread 1180596 from Tamil Team - India. Markdown source: Tamil_Team_-_India/thread_1180596_தமிழ்_வி.md

Original URL About this archive
#1

நண்பர்களே,

நான் Remington விசைப்பலகை முறையினை என் யுபுண்டுவில் பயன்படுத்துகிறேன். ஆனால் அதில் சில மாற்றங்களை என் விருப்பத்திற்கு செய்ய விரும்புகிறேன். உதாரணமாக "க்" அடிக்க வேண்டுமென்றால் புள்ளி அடித்துவிட்டு பிறகு தான் "க" அடிக்கவேண்டும். ஆனால் இதில் மாற்றம் செய்ய விரும்புகிறேன். பயனாளரின் விருப்பத்திற்கு மாற்றமுடியுமா? எப்படி செய்வது என்று விளக்கி யாரேனும் எனக்கு உதவமுடியுமா?

நட்புடன் இரா. ஸ்ரீகிருஷ்ணன்.

#2

நண்பா Tamil UNICODEயை பயன்படுத்தவும்.:p

#3

நான் கேட்பது விசைப்பலகை உள்ளீட்டு முறையில் மாற்றம் செய்வது குறித்து. நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை.

இரா. ஸ்ரீகிருஷ்ணன்

#4

நீங்கள் scim முறையை பின்பற்றலாம். பயன்படுத்தி இருக்கிறீர்களா?