கேயுபுண்டு நிறுவியாச்சு.. நல்லது.. தமிழ் வசதியும் கிடைச்சாச்சு.. அது என்ன ஐ.ஆர்.சி உரையாடல் அப்டீன்னு யோசிக்கறீங்களா! உபுண்டு தமிழ் குழும ஐ.ஆர்.சி ல கலந்துக்கணும்னு விருப்பம்.. ஆனா எப்படின்னு நினைக்கிறீங்களா? ரொம்ப சுலபம்.. கீழே கொடுத்திருக்கற மூணு படிகளை பின்பற்றுங்க... அவ்ளோதான்...
1) [COLOR="DarkRed"]கேபட்டி --> இணையம் --> உரையாடல் IRC Client[/COLOR] தேர்வு செய்யவும். [COLOR="#8b0000"]சேவையக பட்டியல்[/COLOR] என்ற தலைப்போடு மேலுழும்பும் சாளரத்தில் [COLOR="#8b0000"]புதிய[/COLOR] பொத்தானைச் சொடுக்கவும்.
[IMG]http://ubuntuforums.org/g/images/150685/large/1_koversation_-_1.png[/IMG]
2) [COLOR="#8b0000"]New Network - உரையாடல்[/COLOR] என்ற தலைப்போடு மேலுழும்பும் சாளரத்தில்,
Network : தாங்கள் விரும்பும் பெயர்.
Identity: தங்களின் பயனர் பெயர் இயல்பாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கும்.
செயலி துவங்கும் போதே இப்பிணையத்தில் இணைய [COLOR="#8b0000"]Connect on application start up[/COLOR] தேர்வு செய்க.
அதன் கீழுள்ள முதல் சாளரமான [COLOR="DarkRed"]சேவகன்கள்[/COLOR] கீழுள்ள [COLOR="#8b0000"]சேர்[/COLOR] பொத்தானை சொடுக்கவும். [COLOR="#8b0000"]சேவகனை சேர்[/COLOR] என்ற தலைப்போடு ஒரு சாளரம் மேலெழும்பும். அதில்,
சேவகன்: irc.freenode.net கடவுச் சொல்: freenode ல் கடவுச் சொல்லோடு கணக்கு வைத்திருந்தால் அதனை கொடுக்கவும். இல்லையேல் அவசியம் இல்லை.
பின்னர் [COLOR="#8b0000"]தானாக சேரும் வழிமுறைகள்[/COLOR] கீழுள்ள [COLOR="#8b0000"]சேர்[/COLOR] பொத்தானைச் சொடுக்கி மேலெழும்பும் சாளரத்தில் [COLOR="#8b0000"]வழிமுறை[/COLOR] களத்தில் [COLOR="#8b0000"]#ubuntu-tam[/COLOR] கொடுத்து [COLOR="#8b0000"]கடவுச் சொல்[/COLOR] களத்தினை அப்படியே விடுங்கள்.
கீழ் காணும் திரையின் காட்சி தங்களுக்குத் துணைப் புரியும்.
[IMG]http://ubuntuforums.org/g/images/150685/large/1_koversation_-_2.png[/IMG]
[COLOR="DarkRed"]சேவையக பட்டியல்[/COLOR] சாளரத்தில் தாங்கள் கொடுத்த Network பெயர் [COLOR="#8b0000"]வலைமனை[/COLOR]க்கு கீழ் தெரியும். அதனடியில் #ubuntu-tam தெரியும். அதனைத் தேர்வு செய்து [COLOR="#8b0000"]இணை[/COLOR] பொத்தானைச் சொடுக்கவும். உபுண்டு தமிழ் குழும ஐ.ஆர்.சி வாயில் உங்களை அன்புடன் வரவேற்கும்.
[IMG]http://ubuntuforums.org/g/images/150685/large/1_koversation_-_3.png[/IMG]
நன்றி...